கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் கணித, கணினிப் பிரிவு தலைவரும், முன்னாள் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தருமான பேராசிரியர் (அமரர்) R. விக்னேஷ்வரன் அவர்களின் நினைவாக, அவரது மனைவி, பிள்ளைகள் சார்பில், கணிதத் துறையில் சிறப்பு பட்டதாரி மாணவருக்கு சென்ற வருடம் முதல் தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர். அந்த வகையில் 04.10.2025 அன்று இடம்பெற்ற, கிழக்குப் பல்கலைக்கழக 29வது பட்டமளிப்புப் நிகழ்வில், கணிதத் துறையில் பேராசிரியர் (அமரர்) R. விக்னேஷ்வரன் நினைவு, தங்கப் பதக்கம் கணித சிறப்பு பட்டதாரியான திரு.ஸ்ரீதர்குமார் திலுஷன் அவர்களுக்கு தங்கப் பதக்கமும், சான்றிதழும் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் P. பிரதீபன் அவர்களினால் வழங்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் திரு.A. பகீரதன் அவர்களும் கௌரவிப்பு நிகழ்வின் போது பங்கே ற்றிருந்தார்