சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உப குழுவின் அமைப்பது தொடர்பான மாவட்ட மட்ட விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அபிவிருத்திக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தற்பேதைய அரசாங்கத்தினால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளை கவர்ந்தீர்க்கும் வண்ணம் பல அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அவற்றை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் உப குழுவின் அமைப்பது தொடர்பாகவும், வாகரை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, வவுணதீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை சார்ந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்ததுடன், அவற்றை முன்னெடுத்து செல்வதில் ஏற்படும் தாமதங்கள், அவற்றை நிவர்த்தி ப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டு, பல தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களினால் சில திட்டங்களை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல் நிலமைகளை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தார்.
குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், விவசாய, கால்நடை, காணி, நீர்ப்பாசனம் ஆகிய திணைக்களங்களுக்கான மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், சுற்றுலா துறை அமைச்சிற்கான மாவட்ட இணைப்பாளர் வணிதா செல்லப்பெருமாள், தேசிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





