மட்டக்களப்பில் மீட்கப்பட்ட கைக்குண்டுகளை நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று (27) வெடிக்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

 


மட்டக்களப்பில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் கைவிடப்பட்டிருந்த குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டுகளை மீட்கும் நடவடிக்கை நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள வாகனேரி 125 வது மையில் கல் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் காணப்பட்டுள்ளது.

 இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகளை நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று (27) வெடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.