இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 25 வருட அர்ப்பணிப்புமிக்க சேவையை
வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதுடன் கல்வித்துறையில் அவர் ஆற்றிய அளப்பரிய
பங்களிப்பிற்காக பேராசிரியர் செல்வரெத்தினம் குணபாலன் பல்கலைக்கழக
சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.
அவருக்கான கௌரவத்தை பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் வழங்கி வைத்தார்.
இவரது அர்ப்பணிப்பு, ஒருமைப்பாடு மற்றும் சிறப்பான பயணம் பலரை ஊக்குவிக்கிறது.
அவர்
இன்னும் பல ஆண்டுகள் வெற்றி, மகிழ்ச்சி மற்றும் கல்வி மற்றும்
சமூகத்திற்கு அர்த்தமுள்ள சேவை செயவார் என வாழ்த்துக்கள் தெரிவிக்கப்
படுகின்றது.
( வி.ரி.சகாதேவராஜா)





