நாளை ( 24.10.2025) கௌரவிப்பு நிகழ்வு.






ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மற்றும்  மட்டக்களப்பு  பிராந்திய சர்வதேச.உளவியல்சார் கற்கைகள் நிலையம் என்பன இணைந்து அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் தரம் 10,11, மற்றும் உயர்தர மாணவர்களுக்கு  நடார்த்தியது.

"உலக மனநல கூட்டமைப்பின் அவசியம்"
எனும் தலைப்பில் இடம் பெற்ற போட்டியில்,

, சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட்ட (கிழக்கு மாகாணம்)   அன்னமலை நாவிதன்வெளி, கமு/சது/கலைமகள் மகா வித்தியாலயம் வேம்படி பாடசாலையில்  தரம் 12 இல்  கல்வி பயிலும் மாணவி  செல்வி. பாஸ்கரன் மோஷினி 1ஆம் இடத்தையும்,

வலிகாமம் கல்வி வலயத்திற்கு  உட்பட்ட.(வடக்கு மாகாணம்)   யா/ விக்டோரியாக் கல்லூரி, சுழிபுரம் பாடசாலையில் தரம் 13 இல் கல்வி பயிலும் மாணவன். செல்வன். சோமலோஜன்  திலக்ஷன் 2ஆம் இடத்தையும் ,

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட்ட (கிழக்கு மாகாணம்) கல்லடி உப்போடை ,மட்/ விவேகானந்தா மகளீர் கல்லூரி பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி செல்வி.,சிவகுமார் சரேஸ்மிதா 3 ஆம் இடத்தையும் பெற்றிருந்தனர்.

அந்த வகையில் மேற்படி விக்டோரியாக் கல்லூரியின் மாணவன்  செல்வன். சோமலோஜன் திலக்ஷன் நாளை தமது பாடசாலையில் கௌரவிக்கப்பட இருபதாக மேற்படி உளவியல் கல்வி நிலையத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளர்   தேவரஞ்சினி தெரிவித்தார்