அதிர்ச்சியில் இலங்கை மக்கள் ,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாய் .

 


இன்று (13) காலை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், பிற்பகலின் பின்பு 5,000 ரூபாயால் அதிகரித்து, தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
அந்தவகையில் தற்போது, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
 
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 319,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
 
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,125 ரூபாயாகவும்,
 
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
 
உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவதால், தங்கத்தின் விலை முதல் முறையாக இவ்வாறு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.