சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மயிலம்பா வெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் சிறுவர் தின விழா நிகழ்வு ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது .
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ச.ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி கலந்து சிறப்பித்தார் .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களான காவேரி விஜிதரன் , கார்த்திகா பிரசன்னா மற்றும் மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி விரிவுரையாளர் இ.வேல்சிவம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
2வது உதவி ஆளுநர் அரிமா கழகம் மாவட்டம்- 10 அரிமா து .ஆதித்தன் PMJF. ,
ச . ரவீந்திரன் விற்பனை முகாமையாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் மட்டக்களப்பு , மற்றும் க .துரை ராஜா இணைப்பாளர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கரோமன்றம் ஆகியோர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டதோடு தொழில் அதிபர் தாழங்குடா அம்பாள் அரிசி ஆலை க. .இராஜதுரை மற்றும் குடியிருப்பு கனிஷ்ட வித்தியாலய அதிபர் வி.கிருபை ராஜா ஆகியோர் அழைப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் சிறார்களினால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், வரவேற்பு நடனம் என்பன இடம் பெற்றன .
இங்கு பிள்ளைகளின் ஆற்றல் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆடல் பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளும் கவிதை, பேச்சு போன்ற நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.
விழாவில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்களை வழங்கி அதிதிகள் கௌரவித்தனர்.
அத்துடன் இம்முன்பள்ளியில் கல்வி கற்று பின் அரச பாடசாலைகளில் கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற பழைய மாணவர்களுக்கும் பரிசுப்பொதிகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் 5-ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 187 அதி கூடிய புள்ளிகளை பெற்ற மட்டக்களப்பு மண்முனை மேற்கு நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியால மாணவி பிறைசூடி அபிரிஷாவும் வலயக்கல்வி பணிப்பாளர் ரவி தினகரன் அவர்களாலும் மற்றும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டார் .
நன்றி உரையோடு சிறுவர் தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது .
செய்தி ஆசிரியர்