2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் இன்று (6) முதல்
ஆரம்பாகியுள்ள நிலையில்,இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு,
மூன்று விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புற
நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை (Peripheral Immune Tolerance) தொடர்பான
மகத்தான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brankov),
பிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi)
ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும்
ஒக்டோபர் மாதம், மருத்துவம், பௌதீகவியல், இரசாயனவியல், இலக்கியம்,
பொருளாதாரம், அமைதி ஆகிய ஆறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு
நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்தப் பரிசானது பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியது.
அடுத்த ஆறு நாட்களுக்கு மற்ற துறைகளுக்கான நோபல் பரிசு விபரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட உள்ளன.





