மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனையில் கட்டடத்தொகுதியின் அலுவலகப்பிரிவுகள் திறக்கும் நிகழ்வு 27.10.2025 அன்று நடைபெற்றது.
அதன் அடிப்படையில், PSDG 2025 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டடத்தொகுதியின் உப பிரிவுகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர் முரளீஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
குறிப்பாக சுகாதார மேம்பாடு பிரச்சார பிரிவு, தகவல் மற்றும் தொடர்பாடல் பிரிவு, விசர் நோய் தடுப்பு பிரிவு, சுகாதார தகவல் தொழிநுட்பம் மற்றும் உள்ளக கணக்காய்வுப் பிரிவு, தர முகாமைத்துவப்பிரிவு, தொழுநோய்ப் பிரிவு, பிராந்திய வாய் சுகாதார பிரிவு என்பனவாகும்.
அத்துடன் திண்மக்கழிவு முகாமைத்துவப்பிரிவும் இதன் போது திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிராந்திய வைத்திய அதிகாரிகள்,திட்டமிடல் வைத்திய அதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் , ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.































