கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களூடாக செயற்படுத்தப்பட்டுக்
கொண்டிருக்கும்2025 ம் ஆண்டிற்கான PSDG ,CBG, AMP போன்ற வேலைத்
திட்டக்களின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கான ஒன்றுகூடல்
பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன
அபயரத்ன
தலைமையில் திருகோணமலையில் உள்ள பிரதம செயலாளர் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில்(28) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாகாண சபைகள் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத்
, வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருன்
ஹேமசந்திர, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்ணசேகர, மாகாண பிரதம செயலாளர்
தலங்கம, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, நகர பிதாக்கள்,
தவிசாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாகாண பணிப்பாளர்கள், உள்ளூராட்சி
மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள் போன்ற பல் வேறு தரப்பினர்
அழைக்கப்பட்டிருந்தனர்.





