மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உலக உளநல தின நிகழ்வுகளானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் உளவள உத்தியோகத்தர் ரீ. நிசாந்தன் எற்பாட்டில் புதிய மாவட்ட செயலகத்தில் (24) இடம் பெற்றது.இவ்வருடம் உலக உளநல தினமானது "பேரழிவுகள் மற்றும் அவசர நிலைகளில் மனநல சேவைக்கான அணுகல் எனும் தொணிப்பொருளில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பினால் 1992ம் ஆண்டு உலக உள நல தினம் அறிமுகப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் இத்தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
மக்கள் மத்தியில் பொதுவாக உடல் நோய்களைக் குணப்படுத்துவதற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் உள நோய்களுக்கான அறிகுறிகள் காணப்படுமிடத்தும் அவற்றைக் குணப்படுத்துவதன் அவசியம் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
உடலும் உள்ளமும் நோயின்றி இருக்கும் போதுதான் முழுமையான ஆரோக்கியத்துடன் சந்தோசமாக வாழ முடியும். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக அமையும் போதுதான் நமது வாழ்வுப் பயணத்தின் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் பயணித்து நமது இலக்கின் வெற்றியடைய முடிகின்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அழுத்தங்கள் காரணமாக சிலர் உளக்கோளாறுகளுக்குள்ளாகின்றனர் இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களை இனம் கண்டு உளப்பிரச்சினை தொடர்பான அறிவூட்டல் சிறந்த முறையில் வழங்கப்படுவதுடன் உளவளத்துணையும் வழங்கப்படுவது அவசியமாகும்.
கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கே.மோகனதாஸ் வளவான்மை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வி.நவநிதன், ரீ. நிர்மலராஜ் பதவி நிலை உதவியாளர் கே.எம். ரிழா உளவள துணை இணைப்பாளர் திருமதி சுபா நந்தினி உதயகாந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






























