மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஒழுங்கமைப்பில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு விழிப்புணர்வு தின நிகழ்வு-2025

































































மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் அனுசரணையில் மட்டக்களப்பு   நொச்சிமுனை   தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஒழுங்கு படுத்துதலில்  சர்வதேச வெள்ளை பிரம்பு தின நிகழ்வு பட்டிப்பளை கலாசார மண்டபத்தில் 2025.10.15இடம் பெற்றது.
 
ஆரம்ப நிகழ்வாக கொக்கட்டிச்சோலை  மண்முனை தென்மேற்கு பிரதேச சபை முன்பாக இருந்து பேண்ட் வாத்தியத்துடன் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ,கொக்கட்டிச்சோலை பிரதேச பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
அதனைத்தொடர்ந்து அதிதிகள்  மணடபத்துக்கு வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின .
தரிசனத்தின் தலைவர் நா .இருதயராஜன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வுக்கு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் சி .சுதாகர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
   மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் இ   கிரேஷ்குமார் கௌரவ அதிதியாகயாகவும்  ,வைத்தியர் கி .ரமேஷ்,    மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை கோட்ட கல்வி அதிகாரி மூ.உதயகுமாரன் மற்றும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை சமூக சேவை உத்தியோகத்தர்  அ.சபேசன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் .
தரிசனத்தின் தலைவர் நா .இருதயராஜன் தலைமையுரையையும் வரவே   ற்பு  உரையையும் நிகழ்த்தியிருந்தார் , அத்தோடு  கௌரவ அதிதியாக கலந்து கொண்ட  மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் இ   கிரேஷ்குமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து  நினைவுப்பரிசும்  வழங்கி வைத்தார் .
நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் அனைவருக்கும் தரிசனம் பாடசாலை சமூகத்தால் நினைவுபரிசுகள் வழங்கப்பட்டன .
கௌரவ அதிதியால்   தரிசனம் பாடசாலை மாணவர்களுக்கு  நினைவுபரிசுகள் வழங்கி கௌவித்தார் .
தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் பயின்று அரச துறையில் உத்தியோகம் பார்க்கும் மற்றும்  பல்கலை கழகங்களில் பயிலும் மாணவர்களின்  அறிமுக நிகழ்வு சிறப்பானதாக இருந்தது.
 தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை பழைய புதிய  மாணவர்களின்
கலை கலாசார நிகழ்வுகள்  அனைவராலும் பாராட்டப்பட்டது .
வெள்ளைப் பிரம்பு விழிப்புணர்வு தின  நிகழ்வில் தரிசனம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள்  பொதுமக்கள் என பலரும்கலந்துகொண்டனர் .
தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை செயலாளர் மா .கிருஷ்ணகுமார் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது .

செய்தி ஆசிரியர்