
மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா ஸ்ரீ முருகன் விளையாட்டரங்கில் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் தலைமையில் 2025.10.02-அன்று மாலை இடம் பெற்றது .
விளையாட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற பிரதேச கல்வி பணிப்பாளர் திருமதி .N. தங்கவடிவேல் அவர்களும் , கௌரவ விருந்தினர்களாக ஆரையம்பதி ஸ்ரீ கந்தசாமி ஆலய சிவ ஸ்ரீ கணேச லோகநாத குருக்கள், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி K. விஷ்ணுகாந்த் மற்றும் மட்டக்களப்பு ஆரையம்பதி இ.கி .மி .வித்தியாலய அதிபர் S.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இங்கு ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் . மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தேசிய கீதம் வரவேற்புரை ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின .
முன்பள்ளி சிறார்கள் உற்சாகத்துடன் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிந்தார்கள் .20வகையான விளையாட்டு போட்டி சிறார்களால் முன்னெடுக்கப்பட்டன . அதில் விசேடமாக வினோத உடை போட்டியில் கலந்து கொண்ட சிறார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது .
முடிவில் விருந்தினர் மற்றும் பெற்றோர்களுக்குமான போட்டிகளும் இடம் பெற்றன .
போட்டிகளில் பங்கு பற்றிய சிறார்களுக்கு அதிதிகளால் பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன .
பங்கேற்றிருந்த அனைத்து விருந்தினர்களுக்கும் ஸ்ரீ முருகன் பாலர் பாடசாலை சமூகத்தால் நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவைக்கப்பட்டார்கள்
நன்றியுரையோடு விளையாட்டுவிழா இனிதே முடிவுற்றது.
EDITOR