மட் /ஆரையம்பதி நவரத்தினராசா வித்தியாலயத்தில் சிறுவர் தின மற்றும் மரநடுகை நிகழ்வு-2025.10.04

 


மட் /ஆரையம்பதி நவரத்தினராசா வித்தியாலயத்தில் சர்வதேச  சிறுவர் தின நிகழ்வு,  மரநடுகை நிகழ்வு மற்றும் பரிசளிப்பு விழா என்பன  பாடசாலை அதிபர் திரு.மு.சதீஷ்குமார் அவர்களின் தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.தினகரன் ரவி அவர்களும் விசேட அதிதிகளாக பேராசிரியர் A.அன்ரன் அருள்ராஜா( கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்களும் கேணல் குமார -இராணுவ முகம்  கல்லடி அவர்களும் கௌரவ அதிதியாக மண்முனைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.S.தில்லைநாதன் அவர்களும் கலந்து கொண்டு விழாவைச்
 சிறப்பித்தனர்.. 
 சிவானந்தியன் கல்வி அபிவிருத்தி சமூகம் மற்றும் நட்புக்கு உயிர் கொடுப்போம் அமைப்பினரின் அனுசரனையில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு சிறுவர் விளையாட்டுக்கள், பரிசு வழங்கல் நிகழ்வுகளுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.