மட்டக்களப்பு கல்லடி வேலூர் முதியோர் சங்கம் நடாத்திய மாபெரும் இரத்த தான நிகழ்வும் பல் பல் சிகிச்சை முகாமும்-2025
































மட்டக்களப்பு கல்லடி வேலூர் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான நிகழ்வும் பல் சிகிச்சை முகாமும் நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

கல்லடி வேலூர் முதியோர் சங்கத்தின் தலைவரும் பல்சமய ஒன்றியத்தின் தலைவருமாகிய வீ.கே.சிவபாலன் குருக்கள் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி கிறீன் காடன் விடுதியில் இடம் பெற்ற நிகழ்விற்கு விசேட விருந்தினர்களாக கல்லடி இராணுவ முகாமின் அதிகாரி கேணல் இந்திக குமார, கல்லடி கடற்படை முகாமின் உயர் அதிகாரி, கல்லடி வேலூர் கிராம உத்தியோகத்தர், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர், லயன்ஸ் கழக பிரதிநிதிகள், பிராந்திய வைத்திய அத்தியட்சகர் அலுவலக உயரதிகாரிகள், கிறீன் காடன் விடுதியின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் உ.உதயகாந்த் (ஜேபி), எகெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள், கல்லடி வேலூர் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், இரத்த கொடையினையும் வழங்கியிருந்தனர்.

தானங்களில் சிறந்த தானம் இரத்த தானம் - ஒரு சொட்டு இரத்தம் ஒரு உயிரை காக்கும் எனும் தொனிப் பெருளில் இடம் பெற்ற நிகழ்வில் பலர் இரத்த கொடையினை வழங்கியிருந்ததுடன், பல் சிகிச்சையினையும் பெற்றிருந்தனர்.