நேபாளத்தில் வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற 2 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 


நேபாளத்தில் வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற 2 வயது சிறுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தில், சிறுமியரை இறைவனின் அவதாரமாகக் கருதி வழிபடும் பாரம்பரிய வழக்கம் நடைமுறையில் உள்ளது.

இந்தநிலையில் இதுவரைகாலமும் குமாரி என்று அழைக்கப்படும் சிறுமியை, வாழும் தெய்வமாகப் போற்றிவந்தனர்.

அந்த வகையில், 2017ல் தேர்வான குமாரி த்ரிஷ்ணா ஷக்யாவுக்கு தற்போது 11 வயது பூர்த்தியாகியுள்ளதால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதன்படி, நேபாளத்தின் புதிய வாழும் தெய்வமாக ஆர்யதாரா ஷக்யா என்ற சிறுமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கமைய அவர் பல்லக்கில் சுமந்து செல்லப்பட்டு, மன்னர் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.