மிகவும் பாதுகாப்பற்ற
நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில்
நேற்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர்
இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் அரசாங்கம் அனைத்து
மட்டங்களிலும் உள்ள சிறுவர்களைக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு
சிறுவரையும் விட்டுவிடாமல், ஒவ்வொரு சிறுவருக்கும் சமூகப் பாதுகாப்பு
கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர்
ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் தலைமையிலுள்ள தற்போதைய
அரசாங்கம், எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு ஏற்ற நாட்டை உருவாக்குவதற்கு
உறுதி பூண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





