பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

 


இவ்வாண்டின் இறுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

மலையக சமூகத்தினருக்கு இன்று வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.