திருகோணமலையில், 16 வயது
சிறுமி ஒருவரை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவருக்கு 10
வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்
முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்,
திருகோணமலை-சேருநுவர பகுதியில் இந்த பாலியல் வன்புணர்வு சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சட்ட மாஅதிபரினால்
ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகிர்வுப் பத்திரம் தாக்கல்
செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.