நாட்டில் சீரற்ற வானிலைக் காரணமாக இரண்டு மரணங்கள், 144 குடும்பங்கள் பாதிப்பு .

 


கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகிறது. 
 
இதனால் கொழும்பின் சில வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. 
 
பலத்த மழைக் காரணமாகச் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. 
 
அத்துடன், பலத்த மழைக் காரணமாக 144 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
 
இந்த குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 
 
இதனிடையே, இன்று முதல் மழைவீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.