வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உளநலப் பிரிவினால் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.கோறளைப்பற்று வாழைச்சேனை,கோறளைப்பற்று கிரான்,கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று ஓட்டமாவடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களும் இணைந்து இவ் நிகழ்வில் பங்கு பற்றியிரந்தனர்.
வாழைச்சேனை நகர லயன்ஸ் கழகம் இதற்கான அணுசரணையை வழங்கியிருந்தனர்.அபாயங்களிலும் சேவைகளுக்கான அணுகல்,பேரழிவுகள் மற்றும் அவசர நிலைகளில் மன நிலை என்ற கருப்பொருள்கள் உள்வாங்கப்பட்டு இவ் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான விழிப்புணர்வு நடை பவனியானது வாழைச்சேனை கல்குடா பிரதான வீதி வழியாக வந்து சந்தைப் பகுதியை வந்தடைந்தது.பின்னர் அங்கு மேற்குறித்த விடயம் தொடர்பான உளநல விழிப்புணர்வு தொடர்பான நாடகம் மக்களிடையே நிகழ்த்தி காட்டப்பட்டது.அத்துடன் போசாக்கான இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது.





