நாடளாவிய ரீதியில் உள்ள
மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின்
தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகள் இன்னும் முக்கிய
மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை
எதிர்கொள்வதாக அந்தக் கூட்டணியின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ
குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில்
இலங்கையின் மருந்துப் பற்றாக்குறை முற்றிலுமாக தீர்க்கப்படும் என்று
சுகாதார அமைச்சு பலமுறை உறுதியளித்திருந்தது.
ஆனால் தற்போது மருந்துகளுக்கு
ஏற்பட்டுள்ள பற்றாக்குறையானது சுகாதாரத் துறையில் ஆழமான நிர்வாக மற்றும்
அரசியல் தோல்வியை எடுத்துக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல அமைச்சரவை முடிவுகள் இருந்தபோதிலும், எதுவும் வெற்றி பெறவில்லை.





