புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கான பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனுடன் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டி கையேடுகள் மற்றும் கால அட்டவணைகளை வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் இதுவரை எந்தவொரு தரத்திற்கும் உத்தியோகபூர்வமாக பாடத்திட்டங்கள், ஆசிரியர் வழிகாட்டி கையேடுகள் அல்லது கால அட்டவணைகள் வெளியிடப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
2026 ஆம் ஆண்டு முதல் 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப பாடசாலை நடைபெறும் நேரத்தையும் திருத்தியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், 01 மற்றும் 06 ஆம் தரங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.