மட்டக்களப்பு st.mary's பூம்புகார் , புளியந்தீவு மற்றும் st.mary's(முன்பள்ளி மற்றும் சிறுவர் பகல் நேர பராமரிப்பு நிலையம் )பண்டிங் வீதி ஆகிய மூன்று பள்ளிகளின் பணிப்பாளர் திருமதி ராஜினி பிரான்சிஸ் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மத்திய வீதி CATECHETICAL மண்டபத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்தனர் .
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் பிரதம அதிதியாகவும் , மாவட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ. முரளிதரன் மற்றும் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் I.நிரோஜன் அவர்கள் விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர் .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர் .
அதனைத்தொடர்ந்து மூவின மாணவர்களால் இறைவணக்கம் செலுத்தப்பட்டது .
தொடர்ந்து தேசியகீதம் ,பாடசாலை கீதம் இசைக்கப்பட்டது .
வரவேற்புரை திருமதி P.சன்றின் நிகழ்த்தினார் .
திருமதி ராஜினி பிரான்சிஸ் தலைமையுரையாற்றினார் .
ஒன்றிணைந்த மூன்று முன்பள்ளி சிறார்களின் நடனங்கள் , பேச்சுக்கள் இடம் பெற்றன.
பிரதான அதிதியின் உரையின் பின்னர் பரிசளிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன .
திருமதி R.லதாஅவர்கள் இவ் வருடம் முன் பள்ளிகளில் நடை பெற இருக்கும் நிகழ்ச்சிகள் பற்றி பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்கமாக எடுத்துரைத்தார் ..
செல்வி ஹர்ஷாவின் நன்றி உரையோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது .
EDITOR