உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு (Mullaitivu) மாணவன் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்த பரமேஸ்வரன் பாணுசன் என்ற மாணவனே கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் நேற்றையதினம் (29.09.2025) இரவு உயிரிழந்தமை முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவன் 2024 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பொறியியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.
குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளையான இந்த மாணவனின் இழப்பு முல்லைத்தீவு மாவட்ட மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.