முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று (28) சந்தித்தார்.
தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இச்சந்த்திப்பு இடம்பெற்றுள்ளது.
கதிர்காமத்திலிருந்து கொழும்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பின் போது, தாம் சிறையில் இருந்தபோது ஆற்றிய பங்களிப்பிற்கு ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கார்ல்டன் இல்லத்திற்கு வந்த ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவின் உடல் நலன் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





