நீதிக்கான
சுழற்சி முறையிலான உண கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில்
தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக (27) சனிக்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரதப்
போராட்டம் (29) திங்கட்கிழமை மூன்றாவது நாளாக தொடர்ந்தது.
பலர் சோர்ந்து காணப்பட்டனர். இன்னும் பலர் அழுதழுது சாட்சியம் அளித்தனர்.
வடக்கு
கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஸ்ரீலங்காவின்
உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழினவழிப்பு,வலிந்து காணாமல்
ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் குறித்து நாம்
சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் எனும் தொனிப் பொருளுடன்
இப் போராட்டம் ஆரம்பித்தது.
இப் போராட்டத்தில் அதிகளவிலான பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளும் கலந்து கொண்டிருந்தனர்.
அம்பாறை
மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா
செல்வராணி, மட்டக்களப்பு மாவட்ட அமல்ராஜ் அமலநாயகி மட்டக்களப்பு மாவட்ட
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உட்பட நூற்றுக்கு உட்பட்டவர்கள்
கலந்து கொண்டனர்.
( வி.ரி. சகாதேவராஜா)