மட்டக்களப்பு வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்வு.

 

 


 

 





















இன்று 27.09.2025 வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வானது வெளி நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கும், மலேரியா அச்சுறுத்தல் உள்ள பிற நாடுகளுக்கு செல்லவுள்ள பிரயாணிகளுக்குமான முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தெளிவுறுத்தப்பட்டதுடன்
 எதிர்காலத்தில் மலேரியாவுக்கான  ஆபத்தான நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய விழிப்புணர்வும் கலந்துரையாடலும் இடம்பெற்றது . பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில்,  மட்டக்களப்பு மாவட்ட மலேரியா தடை இயக்க பொறுப்பு வைத்திய  அதிகாரி,  வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி,  பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.