உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் உரிமையாளர் சங்கமும் இணைந்து கடற்கரை சிரமதானம்.








உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் உரிமையாளர் சங்கமும் இணைந்து  கடற்கரையை சிரமதானம் மூலம் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டது. 

இதன் போது, பாசிக்குடா மற்றும் அதனை அண்டிக்காணப்படும் யானைக்கல் மலை, கடற்படை முகாம் என சுமார் 5 கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்தில் குறித்த சிரனதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. 

கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் உரிமையாளர் சங்கத்தலைவர் திரு. ரணிக்க தலைமையில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியின் போது, நட்சத்திர விடுதி முகாமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 

குறித்த பணியின் போது சுமார் 500 கிலோ கிராம் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. 

குறித்த பணியில் ஈடுபட்ட மற்றும் ஒத்துழைப்பு வழங்கி அனைவருக்கும் கிழக்கு மாகாண நட்சத்திர விடுதிகள் உரிமையாளர் சங்கத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்.
ந.குகதர்சன் 

வாகரை ஜெயந்தியாய பிரதேசங்களிலிருந்து தூர மற்றும் குறுகிய பிரயாணங்களை மேற்கொள்ளும் பிரதேச மக்களும்    பிரயாணிகள், பாடசாலை ஆசிரியர்களும் மிக நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த பஸ்தரிப்பிடமில்லாத பிரச்சினைக்கு தீர்வு வட்டார பிரதேச சபை உறுப்பினர்களினால் கிடைக்கப்பெற்றுள்ளது. 

வெயில், மழை காலங்களில் எதிர்நோக்கி வந்த அசெளகரியங்களைக் கவனத்திற்கொண்டு கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம்.தாஹிர் மற்றும் ஜே.எம்.முனாஸ் ஜேபி ஆகியோர் வாகரை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பஸ்தரிப்பிட நிர்மாணப்பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. 

இதன் மூலம் பிரதேச மக்களும் பிரயாணிகள், பாடசாலை ஆசிரியர்களும் பெரிதும் நன்மையடைவர். 

தமது வேண்டுகோளையேற்று பஸ்தரிப்பிடங்களுக்கான அனுமதியையும் நிதியொதுக்கீட்டையும் பெற்றுக்கொடுத்த கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபையின் தவிசாளர் க.தெய்வேந்திரன் மற்றும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் ஆகியோருக்கு பிரதேச மக்கள் சார்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குறித்த நிர்மாணப்பணிகளை பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் பிரதேச செயற்பாட்டாளர்களுடன் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், பணிகள் செவ்வனே நிறைவேற்றப்பட்டு துரிதகதியில் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்ட வேண்டுமென்ற வினயமான வேண்டுகோளையும் விடுத்தனர்.

நீண்டகாலத்தேவையை நிறைவேற்றித்தந்தமைக்காக பிரதேச சபை உறுப்பினர்கள் இருவருக்கும் பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

 

  ந.குகதர்சன்