தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைக் கைது செய்யுமாறு இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை ஓவியா அந்த பதிவை நீக்கியுள்ளதாக அறியமுடிகிறது

 


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைக் கைது செய்யுமாறு இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை ஓவியா அந்த பதிவை நீக்கியுள்ளதாக அறியமுடிகிறது. 
 
நேற்றைய தினம் கரூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்குண்டு 40 பேர் வரை பலியாகியுள்ளனர். 
 
இதனை அடுத்து பல்வேறு தரப்பினரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் உட்பட அந்த கட்சி தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் இன்று காலை நடிகை ஓவியா விஜய்யைக் கைது செய்யுமாறு பதிவொன்றை இட்டுள்ளார். 
 
குறித்த பதிவையடுத்து சமூக ஊடக வாசிகள் நடிகை ஓவியாவுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்து வரும் பின்னணியில் அவர் அந்த பதிவை நீக்கியுள்ளார்.