சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு நுழைந்த மூன்று இலங்கையர்கள் இந்திய மத்திய குற்றப்பிரிவினரால் கைது.

 


சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு நுழைந்த மூன்று இலங்கையர்களை இந்திய மத்திய குற்றப்பிரிவு (CCB) பெங்களூரில் வைத்து நேற்று (29) கைது செய்துள்ளது. 
 
இந்த மூன்று இலங்கையர்களுக்கும் பெங்களூரு, தேவனஹள்ளி பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் அடைக்கலம் கொடுத்த பெங்களூரைச் சேர்ந்த ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களும் கசுன் குமார ஷங்கா, E.W.A. அமில நுவன் மற்றும் ரங்க பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இந்திய மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் 13 கையடக்க தொலைபேசிகளையும் மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.