புதிய அரசாங்கத்தினால்இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு அரச திணைக்களங்களில் இம்முறை வாணிவிழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம் பெற்று வருகிறது இதே வேளை மட்டக்களப்பு கல்லடி கமநல சேவை நிலையத்திலும்
பெரும்பாக உத்தியோஸ்தர் எம் ஐ .எம் .பாய்ஸ் தலைமையில் வாணி விழா பூஜை நிகழ்வுகள் பக்திபூர்வமாக இடம் பெற்றது
கமநல சேவை நிலையம் மங்கள தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சரஸ்வதிக்கு சகலகலாவல்லி மாலை தேவார பாராயணம் இசைக்கப்பட்டு விசேட பூஜைகள் இடம் பெற்றது
மட்டக்களப்பு கல்லடி கமநல சேவை நிலையத்தில் கடமை புரியும் ஊழியர்களுக்கு நல்லாசி வேண்டி இங்கு பூஜைகளும் இடம் பெற்றது
மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஹரிஹர சர்மா குருக்கள் தலைமையில் இந்த பூசைகள் இடம் பெற்றது.
வரதன்


.jpeg)







