பெரண்டினா மட்டக்களப்பு ஆரையம்பதிக் கிளையினால் "போதைப்பொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் "என்னும் தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு செயலமர்வு 2025.09.29 அன்று கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது .
இராமகிருஷ்ணா மகாவித்தியாலய 100கும் மேற்பட்ட மாணவர்கள் செயலமர்வில் கலந்து கொண்டார்கள்
இதற்கு வளவாளராக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை திணைக்கள வைத்தியர் சௌ.டான் அவர்கள் பங்கேற்றிருந்தார்
.
ஆரையம்பதி பெரண்டினா கிளைமுகாமையாளர் மாணிக்கராஜ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வானது பாடசாலையின் அதிபர்,பிரதிஅதிபர்,ஆசிரியர்கள் மற்றும் பெரண்டினா உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றலோடு மிகச்சிறப்பாக இடம்பெற்றது.