மட்/மட்/கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் அதிபர் சரவணமுத்து கணேசமூர்த்தி தனது 60 வயதில் 37 வருட ஆசிரியர் சேவையிலிருந்து பணி நிறைவு காண்கிறார்.

 

 


 


































மட்டக்களப்பு மாவட்டம்  வெல்லாவெளி பிரதேசத்தை  பிறப்பிடமாகக் கொண்ட சரவணமுத்து கணேசமூர்த்தி அவர்கள் 

ஆசிரியராக 11வருடங்களும்,    4வருடம் ஆசிரியர் ஆலோசகராகவும், 22வருடம் (அதிபர் சேவை தரம் 1 )அதிபராகவும் பணி புரிந்து   தனது   37வருட ஆசிரியர் சேவையை நிறைவு  செய்து  பணி ஓய்வு  பெற்று செல்லும் திரு  சரவணமுத்து கணேசமூர்த்தி அவர்களை அவர் பணி புரிந்த  மட்டக்களப்பு கருவேப்பங்கேணி  விபுலானந்த  பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டு  பிரியாவிடை வழங்கப்பட்டது .

1988 ஆம் ஆண்டு தராதரப்பத்திர ஆரம்பக் கல்வி ஆசிரியராக பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்/பட்/ வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இணைந்து கொண்ட இவர் மட்/பட்/திருக்கொன்றைமுன்மாரி அ.த.க.பாடசாலை, மட்/பட்/கோவில்போரதீவு விவேகானந்தா வித்தியாலயம், மட்/பட்/முனைத்தீவு சக்தி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகவும், மட்/பட்/மண்டூர்-39 அ.த.க.பாடசாலை, மட்/பட்/ காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயம் மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயம், மட்/மட்/ கருவேப்பங்கேணி விபுலானந்தாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் தனது பணிக்காலத்தில் தனது சேவையினை மேலும் வளப்படுத்த விவசாயத்தில் பயிற்றப்பட்டவராகவும், கலைமாணி பட்தாரியாகவும், பட்மேற்கல்வி டிப்ளோமா பட்டத்தையும், முதுகல்விமாணி பட்டத்தையும் பெற்று கல்வித் தகைமைகளை உயர்த்திக் கொண்டார்.

கல்விப் கல்விப் பணியில் அதிபர்களுக்கான குருபிரதீபா பிரபா விருதினை தொடர்ந்து மூன்று வருடங்கள் பெற்றுக் கொண்டார். அத்துடன் கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டமைக்காக யெர்மனி தமிழருவி வானொலியின் 'செந்தமிழ் தேனீ' விருது, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் 'சிறுகதைக்கான விருது' என்பவற்றையும் பெற்றுக்கொண்டார்.

மேலும் பல்வேறு வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகங்களில் இவரின் பல்வேறு ஆக்கங்கள் வெளிவந்ததுடன், 'மட்டக்களப்பு வாழ்வியல் தடங்களில் ஆசிரியர் சிரோமணி தம்பிப்பிள்ளை செல்வநாயகம்' எனும் வரலாற்று நூலினையும், 'உயிர்ப்பின் முகவரி' எனும் சிறுகதையினையும், பாடசாலை மட்டத்தில் 'தேனருவி', 'கேணி – 03' எனும் நூலினையும் வெளியீட்டு வைத்தார்.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் துணைச் செயலாளர், கிராமமுன்னேற்றச் சங்கச் செயலாளர், போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவகத்தின் இயக்குனர் சபை உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகார சபையின் உறுப்பினர், போரதீவுப்பற்றுப் பிரதேச கலாசார சபை உறுப்பினர், கோவில்போரதீவு இளைஞர் எழுர்ச்சி ஒன்றிய ஆலோசகர் போன்ற பதவிகளை வகித்து பொதுச், சமூகப் பணிகளில் ஈடுபட்டு உழைத்தவராவார்.