2025 ஆம் ஆண்டுக்கான மாணவ தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு (Ministry of Health and Mass Media) தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் இன்றும் (20) நாளையும் (21) நேர்காணல்கள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான நேர்காணல்களை மேலே குறிப்பிட்ட அதே திகதிகளில் கண்டி தாதியர் கல்லூரியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான நேர்காணல்களை மேலே குறிப்பிட்ட அதே திகதிகளில் கண்டி தாதியர் கல்லூரியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.