அறுகம்பைக்கு சுற்றுலா வந்த பேருந்து கோமாரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் பலர் பலத்த காயமடைந்ததுடன் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவர்கள் வெலிமடையை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
விபத்து சம்பவித்த பேரூந்தில் சுமார் 52 பேர் பயணித்ததாகவும் அவர்கள் ஒரே குடும்பத்து உறவுகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு, அம்பாறை வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.