மீண்டும் தேசிய மட்டத்தில் மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய நாமம் பதிக்கப்பட்டுள்ளது

 








மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் மல்யுத்த போட்டியில்   பாடசாலையின் நாமத்தை பதித்துள்ளனர். தற்பொழுது தேசிய மட்டத்தில் இடம்பெறும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மல்யுத்த போட்டியில்   சிவானந்தா    மாணவர்கள் இருவர் தங்க பதக்கத்தினையும் ஒரு மாணவர் வெண்கல பதக்கத்தையும் பெற்று சிவானந்தா பாடசாலையின் நாமத்தை தேசிய மட்டத்தில்  நிலைநிறுத்தியுள்ளனர்.

Gold Medal 🥇
1. Aathiththiya - Un20 ( 54-57 Kg) 2. S. Dirushanth -  Un18 ( 55-60 Kg)

Bronze Medal 🏅
1. N. Nirugash - Un 20 ( 61- 65 Kg)

 மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் மட்டக்களப்பு மண்ணுக்கு கிடைத்த மிக பெரிய சொத்தான எமது பழைய மாணவரும் மல் யுத்த பயிற்றுவிப்பாளருமான் திரு. திருச்செல்வம் அவர்களது சேவையானது வார்த்தைகளால் சொல்லமுடியாது இவ்வாறான அர்ப்பணிப்புள்ள மாணவர்களை எமது சிவாநந்தா எனும் அன்னையால் மட்டுமே உருவாக்க முடியும் என்று பெருமையாக சொல்லமுடியும். எனவே திரு . திருச்செல்வத்திற்க்கு நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

அதேபோன்று எதை நாம் பாடசாலையில் ஆரம்பித்தாலும் அதனை செய்வோம் என்று சொல்லும் நேர்மறை சிந்தனைகொண்ட அதிபர், பிரதி அதிபர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

பொறுப்பாசிரியர் திருமதி. வேமனாதேவி  மற்றும் மாணவர்களுடன் பயணிப்பதுடன் மாணவர்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் செயல்படுத்தும் சிவானந்தா பழைய மாணவரும் பாடசாலையின் பயிற்றுவிப்பளருமான திரு . யசோதனன் அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.