இன்று 29.08.2025 செங்கலடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் புல்லுமலையில் அமைக்கப்பட்டுள்ள தனியார் தண்ணீர் தொழில்ச்சாலையை திறப்பதற்கு குழுவொன்றை அமைத்து சாதகமாக அமைந்தால் திறப்பதற்கான அனுமதி வழங்கப் படுமென அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினராக உள்ள க.பிரபு அவர்கள் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.
எனவே எந்த வகையிலும் இதனை அனுமதிக்க முடியாது.நிலத்தடியில் இயற்கையாக கிடைக்கும் நீரை தனியொருவரின் வருமாணத்திற்கு அனுமதிப்பதன் மூலம் மாவட்டத்தின் வளத்தை இழக்க முடியாது.
நிலத்தடியில்
உறுஞ்சப்படும் நீரானது வேறு பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லும் போது மீள் சுழட்சியாக மீண்டும் அவ்விடத்தில் நீர் ஊறுவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்படும். எனவே இதனை அனுமதிப்பதன் மூலம் எதிர் காலத்தில் குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான தண்ணீர் வளம் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
அத்துடன் குளம் குட்டைகளில் உள்ள நீர் நிலைகள் வற்றிப் போகும். ஜீவராசிகளுக்கான தண்ணீர் கிடைக்காமல் போகும்.மனிதன் யானைப் பிரச்சணைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மரம், செடி, கொடிகளுக்கான நீர் இன்றி வணங்கள் பாளைவணமாகும்.இவை எல்லாம் ஓரிரு வருடங்களில் நடப்பவை அல்ல.எனவே ஒரு அபிவிருத்தி திட்டத்தை கையிலெடுக்கும் போது அதற்கு நீண்டகால நோக்கம் இருக்க வேண்டும்.எவ்வகையிலும் அவை இயற்கையையோ,சுற்றுப்புற சூழலையோ பாதிக்க கூடாததாக இருக்க வேண்டும்.
எனவே உடனடியாக இத்திட்டம் கைவிடப்பட வேண்டும். தொடரும் பட்சத்தில் மேற்கூறிய அனர்த்தங்கள் காலப்போக்கில் ஏற்பட்டு மாவட்டம் மிக மோசமான பின்னடைவை எதிர்காலத்தில் எதிர்நோக்கும் என்பதனை எச்சரிக்கை யாக கூறி வைக்க விரும்புகின்றோம்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்
ச.சிவயோகநாதன்.