தொடருந்து கழிவறையில் சிசுவொன்றின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

 


மாளிகாவத்தை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொடருந்து ஒன்றிலிருந்து சிசுவொன்றின் உடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெமட்டகொட காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 
 
குறித்த தொடருந்தில், மூன்றாவது பெட்டியின் கழிவறையிலிருந்து, பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்றின் உடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. 
 
இது மருத்துவமனையில் இடம்பெற்ற பிரசவம் அல்ல என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 
 
சம்பவம் தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் தெமட்டகொட காவல்துறையினர், சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர். 
 
இதன்படி, சிசுவின் உடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி, அறிக்கையை பெறுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.