வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பொலிஸ் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு இன்று இடம்பெற்றது.












வாழைச்சேனை மயானம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் காணப்பட்ட கழிவுகள் மற்றும் பற்றைக்காடுகள் என்பன அகற்றப்பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

 இதில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன்,
புதுக்குடியிருப்பு பொலிஸ்பாதுகாப்பு குழுவினர், பொதுமக்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச சபை வாகனம் மூலம்  குப்பைகள்  அகற்றப்பட்டதுடன், குறித்த பகுதியில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுபவர்கள் இனங்காணப்படும் போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ்பாதுகாப்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

  ந.குகதர்சன்