காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் ஐஸ் போதைபொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது

 


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் ஐஸ் போதைபொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ். நந்தன தெரிவித்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பாலமுனை, பூநொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வைத்து ஐஸ்போதை பொருட்களுடன் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின்போதே ஐஸ்போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2,520 மில்லிகிராம் ஐஸ் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலியில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.