யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் திறக்கப்பட உள்ளது .

 



​செப்டம்பர் 1, திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் தனது சேவைகளைத் தொடங்கவுள்ளது. வட மாகாண மக்கள் இனி கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக கொழும்புக்குச் செல்ல வேண்டியதில்லை.
​ஜனாதிபதி அநுரகுமார திறந்து வைக்கும் இந்த அலுவலகத்தில், ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டு வழிகளிலும் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
​இந்த 70 மில்லியன் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அலுவலகம், யாழ்ப்பாணம் மற்றும் வட மாகாண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.