வரதன்
புதிய அரசாங்கத்தினால் நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்து க்களை தடுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான போக்குவரத்து நெடுஞ்சாலைகாலில் இன்று காலை மட்டக்களப்பு போக்குவரத்து போலீசாரினால் விசேட வீதி சோதனைகள் முன்னெடுக்கப்பட்டது
புதிய போலீஸ் மா அதிபரின் உத்தரவு அமைய நெடுஞ்சாலை விசேட போக்குவரத்து போலீஸ் பிரிவினரால் மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து சாலைகளில் அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களை அடையாளம் காணும் முகமாக விசேட தொழில்நுட்பக் கருவிகளின் உதவியுடன் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது
இந்த பரிசோதனை நடவடிக்கைகளின் போது அதிகமான வேகத்தில் பயணித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது