காரைதீவு
விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனியின் போது தெரிவான முதல்
மூன்று சிறந்த அணிகளுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது.
அதி
சிறந்த அணிகளாக முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு அணியும், இரண்டாம் இடத்தை 2016
ஆம் ஆண்டு அணியும், மூன்றாவது இடத்தினை 2004 ஆம் ஆண்டு அணியும் பெற்றுக்
கொண்டன.
அதில் முதலாவது பணப் பரிசை பெற்ற 2015 அணி தமக்கான பணப்பரிசினை மீண்டும் பாடசாலைக்கே வழங்கிவைத்தது.
இந்த நிகழ்வு அதே மைதானத்தில் நடைபவனி நிறைவடைந்த மறுகணம் நடைபெற்றது.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனி கடந்த ( 16 ) சனிக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றமை தெரிந்ததே.
கல்லூரியின்
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம் மாபெரும் பவளவிழா
நடைபவனியில் 43 வருடங்களில் பயின்ற மாணவர் அணியினர் அலங்கரிக்கப்பட்ட
வாகனங்கள் சகிதம் தனித்துவமான சீருடையுடன் கலந்து கொண்டனர்.
இறுதி வரைக்கும் ஒழுக்கம் பேணி கட்டுப்பாட்டுடன் 10 நிபந்தனைகளை பூர்த்தி செய்த முதல் மூன்று அணிகளுக்கு
பரிசு பாராட்டு வழங்கி வைக்கப்பட்டன.
பரிசளிப்பு விழா
சங்கத்தின் தலைவரும் ,கல்லூரி அதிபருமான ம.சுந்தரராஜன் தலைமையிலும்
பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகரும், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜாவின் நெறியாழ்கையிலும்
நடைபெற்றது.
பழைய
மாணவர் சங்கத்தின் தலைவர், ஆலோசகர்,செயலாளர் லோ.சுலக்ஷன், பதில் பொருளாளர்
வி.குகனேந்திரராஜா, உப செயலாளர் எஸ்.டனிஸ்காந்த், உள்ளிட்ட நிருவாக
சபையினர் செயற்படுத்தினர்.
அணிகளிடையே
சிறந்த மூன்று அணிகளை தெரிவுசெய்ய ஓய்வு நிலை அதிபர்களான தி.வித்யாராஜன்,
இ.ரகுபதி, பா.சந்திரேஸ்வரன், கே . புண்ணியநேசன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்
எஸ்.சுந்தரமனோகரன் ஆகியோர் மத்தியஸ்தம் வகித்தனர்.
( வி.ரி.சகாதேவராஜா)