
இன்று 03.08.2025 ஞாயிற்றுக்கிழமை பிரதான வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ
ஆலயத்திற்கருகாமையில் 63 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக
காத்தான்குடி பொலீசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது கிராங்குளம் பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை பத்மநாதன் என்பவரரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த
நபர் வீட்டில் இருந்து ஆரையம்பதி வைத்தியசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு
வீட்டிலிருந்து வெளியேறி மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்திருந்த நிலையில்
காத்தான்குடி பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்
இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.