பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஆபாசக் கதைகளை ஒளிபரப்பிய யூடியூப்
சேனல் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட
கடுவெலையைச் சேர்ந்த ஒருவருக்கு, கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி
ஜயதுங்க ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஆறு மாத
சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுத்
துறையின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு தாக்கல் செய்த வழக்கில், திமுது
சாமர (டோப்பியா) என்ற பெயர் கொண்ட நபர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு,
அவருக்கு இந்த ஐந்து ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஆறு மாத
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலை
ஆசிரியை ஒருவர், ரகசிய பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில்
நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கணினி குற்ற விசாரணைப் பிரிவு இந்த
வழக்கை தாக்கல் செய்திருந்தது.
தனது புகைப்படம் ஒரு ஆபாசக் கதைகளை
வெளியிடும் யூடியூப் சேனலில் காண்பிக்கப்பட்டதாக ஆசிரியை அளித்த
முறைப்பாட்டின் பேரில், மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு
தாக்கல் செய்யப்பட்டிருந்தது.