மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்ற பேரவையின் 10வது ஆண்டு நிறைவும் 150வது பட்டிமன்ற அரங்கேற்றமும் .


 





 






































































































மட்டக்களப்பு மஞ்சந் தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி சர்வதேச திறன்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய "தற்கால இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்துவது போதும் போதாது" எனும் தலைப்பில் கதிரவன் பட்டிமன்ற பேரவை வழங்கும் 10 ஆவது ஆண்டு நிறைவில் 150 ஆவது பட்டிமன்றம் மஞ்சம் தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் 31.07.2025 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் திரு மா. சோமசூரியம் அவர்களின்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர்  திரு சூ.பார்த்தீபன் அவர்கள் பங்குபற்றியிருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு வர்த்தகர்கள் சங்கத் தலைவர் தேசபந்து மு.செல்வராசா, மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க தலைவர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த எழுத்தாளர் தா. சிதம்பரப்பிள்ளை, மனிதநேய காப்பக ஆலோசகர் வசந்தராஜா, கவிஞர் கா.சிவலிங்கம், மகுடம் வி.மைக்கல் கோலின், கவிஞர் வீனாத் தானா, புது குடியிருப்பு ஆலய பரிபாலன சபைத்  தலைவர் திரு.வே.தட்சணாமூர்த்தி, ஆகியோர் பங்குற்றி இருந்தனர்.

கௌரவ விருந்தினர்களாக தொழில்நுட்பக் கல்லூரியின் உப அதிபர் மற்றும் பிரிவு தலைவர்கள், கதிரவன் கலைக் கழகம்-கதிரவன் பட்டிமன்ற பேரவை ஆகியவற்றின் ஆலோசகர்கள், மட்டக்களப்பின் கலை இலக்கிய ஆர்வலர்கள் முதலானோர் பங்குபற்றி இருந்தனர்.

நிகழ்வில் பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள், 150 ஆவது பட்டிமன்றத்தை சிறப்பித்து "பட்டிமன்றம்" சிறப்பிதழ் வெளியீடு,  150 ஆவது பட்டிமன்றம், கௌரவிப்புகள் முதலானவைகள் சிறப்பாக நடைபெற்றது.

150 ஆவது பட்டிமன்ற விசேட பேச்சாளர்களாக கதிரவன் த. இன்பராசா தலைமையில், கவிஞர் அ. அன்பழகன் குரூஸ், மட்டுநகர் சிவ வரதகரன், பாலமீன்மடு இரா. கலைவேந்தன், சோலையூரான் ஆ. தனுஷ்கரன், திருமதி நர்மதா அகளங்கன், கவிஞர் அழகு தனு ஆகியோர் பங்கு பற்ற கதிரவன் அங்கத்தவர்களான புதுவயூர் பூ.தியாகதாஸ் வரவேற்புரை வழங்க, கவிஞர் தங்க யுவன் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி தொகுப்பினை சி.சுதேஸ்வரன் வழங்கியிருந்தார்.