விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதற்கு தடை .




இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (AASL) நிறுவனம், நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது.

AASL வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில், எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் ஆரத்திற்குள்(Radius), 300 அடி உயரத்திற்கு மேல் பட்டங்கள் அல்லது வேறு எந்த பறக்கும் பொருட்களையும் விடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவது, தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என AASL மேலும் எச்சரித்துள்ளது.

விமான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, விமானங்களுக்கும் பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.