அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு எம்மை அச்சுறுத்தி மிரட்ட முடியாது- நாமல் ராஜபக்ச

 


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு எம்மை அச்சுறுத்தி மிரட்ட முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று(04.07.2025) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டின் சுயாதீன நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது.

 எனவே, எமக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை சட்டத்தின் பிரகாரம் எதிர்கொள்வோம்.

 குற்றமற்றவர்கள் என்பதை நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நிரூபிப்போம். கைது செய்யப்படுவீர்கள், சிறையில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தி எதிரணிகளை மௌனிக்க வைப்பதற்கு அரசு முற்பட்டால், அந்த விடயம் ஒருபோதும் நடக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.