மட்டக்களப்பில் சர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது .





 

 



 









 








சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையத்தின் முன்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முகாமையாளர் நடராசா சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வின்போது தொழிசார் முயற்சியினை ஊக்குவிக்கும் தூண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அதேவேளை அதுதொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.

குறிப்பாக, உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்கல்வியினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனம் வழங்கி வருவதுடன், அதன் மூலமாக அவர்களுக்கான தொழிலை உருவாக்கி கொடுப்பதே எங்களது நோக்கமென்று மட்டக்களப்பு மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் முகாமையாளர் நடராசா சுதர்சன் இதன்போது தெரிவித்தார்.

ஒரு வருடகாலப் பகுதிக்குள் 50 - 75 ஆயிரம் இளஞர், யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதே நோக்காக உள்ளதென்றும் அதன் மூலமாக எமது நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டு - துஷாரா